தொடர்பு: +91 98402 44001

முக்கிய அம்சங்கள்

வணிக நலனுக்கும், சமூக நலத்திற்கும் இணைந்த ஓர் இயக்கம்!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை என்பது வணிக உலகத்தில் ஒற்றுமை, உரிமை, நலன் மற்றும் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் மிக முக்கியமான அமைப்பாகும். இந்த அமைப்பு 1982 ஆம் ஆண்டில் வணிக தந்தை, சுதேசி நாயகன் திரு. த. வெள்ளையன் அவர்களின் ஆழ்ந்த பார்வையும், சமூகத்தின் நலனில் கொண்ட நம்பிக்கையுடனும் தோற்றுவிக்கப்பட்டது.

வணிக சமூகத்தின் உரிமைக்குரலாக உருவெடுத்த இப்பேரவையின் பின்புலத்தில், திரு. த. வெள்ளையன் அவர்கள் கொண்ட தன்னலமற்ற சேவை உணர்வும், போராட்ட மனப்பான்மையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அவர் வழிநடத்திய சமூகநீதிப் போராட்டங்கள், வரி மீதான கண்டனங்கள், வணிகக் கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வணிகர்களுக்கு உரிமை நலன்கள் கிடைக்க வழிவகுத்தன.

இன்றைய தலைமையிலான எழுச்சி நாயகன் டைமன் ராஜா வெள்ளையன் அவர்கள், நிறுவனர் தலைவர் திரு. த. வெள்ளையன் அவர்களின் மகனாவார். அவர், தந்தையின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, தொழில்நுட்பத்தையும், இளைய தலைமுறையின் கனவுகளையும் இணைத்து, வணிக சங்கத்தை முன்னேற்றத்தின் புதிய பாதையில் இட்டு நடத்தி வருகிறார்.

About Us
TVSP Logo

வரலாறும் போராட்டங்களும்

உள்நாட்டு வணிக வளர்ச்சி எங்கள் இலக்கு – நம் பாரம்பரியத்தின் பாதுகாப்பு எங்கள் கடமை!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நிறுவனர் தலைவர் திரு. த. வெள்ளையன் அவர்கள், வணிக சமூகத்தின் உரிமைகளுக்காகவும், சுதேசியத்தை வளர்க்கவும் தனது வாழ்க்கையே அர்ப்பணித்த ஒரு தொண்டர்.

இந்திய உற்பத்திகளை ஊக்குவித்தவர் – கலிமார்க் குளிர்பானங்கள், இளநீர், தேங்காய் எண்ணெய், மரபு மூலிகைச் சோப்புகள் போன்ற உள்நாட்டு பொருட்களுக்கு ஆதரவு அளித்து வந்தவர்.

பயன்கள்

கல்வி உதவி

நமது சங்கத்தில் உள்ள உறுப்பினரின் மகனோ அல்லது மகளோ பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளாக இருந்தால் நமது சங்கம் சார்பாக 1000 ரூபாய் நன்கொடையாக வழங்கப்படும்.

மரண நிவாரணம்

நமது சங்கத்தின் உறுப்பினர் எதிர்பாராத விதமாக இயற்கை மரணம் அடைந்தாலும் விபத்துக்கள் மூலம் மரணம் அடைந்தாலும் நமது சங்கத்தின் மூலமாக நிதி உதவி வழங்கப்படும்.

விபத்து நிவாரணம்

நமது சங்க உறுப்பினர்கள் விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டால் காயத்திற்கு ஏற்ப சங்கம் சார்பாக நிதி உதவி வழங்கப்படும்.

திருமண உதவி

நமது சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் நபருக்கு அல்லது உறுப்பினரின் மகளுக்கும் மகனுக்கும் திருமண உதவித்தொகை வழங்கப்படும்.

ஓய்வூதியம்

நமது சங்கத்தில் இருந்து ஓய்வு பெற்ற உறுப்பினர்களுக்கு, மாத ஊதியத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

காப்பீட்டுத் திட்டங்கள்

வியாபாரிகள் நம் நாட்டின் முதுகெலும்பு! பல்வேறு காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.

கோட்பாடுகள்

நேர்மை

நேர்மையான வணிக நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், வணிகர்களிடையே நம்பிக்கையை உருவாக்கவும்.

ஒற்றுமை

எல்லா வணிகர்களும் ஒன்று சேர்ந்தே முன்னேற வேண்டும் என்ற தார்மீக அடிப்படை.

உரிமைகள் பாதுகாப்பு

வணிகர்களின் சட்டபூர்வ உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல்.

சமூக பொறுப்பு

வணிக வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல் சமூக நலனும் முக்கியம்.

பயிற்சி

அறிவு, தொழில்நுட்பம் மற்றும் தகுதி மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குதல்.